சந்திரமுகியாக மிரட்டும் கங்கனா ரனாவத்.. முக்கிய பாடல் இன்று வெளியீடு.! - Seithipunal
Seithipunal


சந்திரமுகி 2 படத்தின் 'ஸ்வாகதாஞ்சலி’ எனத் தொடங்கும் பாடல் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் சந்திரமுகி. இந்த திரைப்படம் அந்த காலத்திலேயே அதிக வசூல் மற்றும் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.

இந்தப் படத்தின் வெற்றியையடுத்து, அப்போதே சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என இயக்குனர் பி.வாசு அறிவித்திருந்தார். அதன்படி லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 திரைப்படம் தயாராகி வருகிறது.

மேலும் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மற்றும் சரத்குமார், வடிவேலு, நாசர், லட்சுமிமேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் கீரவாணி இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் படிப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில், வரும் செப்டம்பர் 19ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனையடுத்து சந்திரமுகி 2 படத்தின் அடுத்த அடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்வாகதாஞ்சலி’ எனத் தொடங்கும் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandramukhi 2 1st single today release


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->