மறைந்தும் மகன் படத்தில் என்ட்ரி கொடுத்த கேப்டன்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், அரசியல் கட்சி தலைவராகவும் திகழ்ந்தவர் கேப்டன் விஜயகாந்த். இவர், கடந்தாண்டு டிசம்பர் மாதம் காலமானார். இந்த நிலையில், மறைந்த கேப்டன் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பம் மூலமாக ‘படை தலைவன்’ என்ற படத்தில் கொண்டு வந்துள்ளனர்.

அதாவது விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் இயக்கத்தில் தற்போது ‘படை தலைவன்’ என்ற படம் உருவாகியுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை யு. அன்பு என்பவர் இயக்கியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதமே ‘படை தலைவன்’ ரிலீஸ் ஆவதாக சொல்லப்பட்ட நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.

இந்த நிலையில் ‘படை தலைவன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பழங்குடியின மக்களின் வாழ்வியலை பின்னணியாகக் கொண்டு ஒரு யானைக்கும் அதனுடைய பாகனுக்கும் இடையிலான உறவை கூறும் விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரெய்லரின் இறுதி காட்சியில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் முகமம் அதன் பின்னணியில் அவரது ‘நீ பொட்டு வச்ச தங்க குடம்’ பாடலும் ஒலிக்கிறது. சமீபத்தில் வெளியான ‘லப்பர் பந்து’ படத்திலும் இந்த பாடல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து, ‘படை தலைவன்’ படத்திலும் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
------------------------


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

captain vijayakant act ai method in son sanmuga pandian padaithalaivan movie


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->