பொண்ணுக்கு 39., பையனுக்கு 27., ஆகா மூன்றாவது கல்யாணம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது நீண்ட நாள் காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். 

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியாக இருந்து வருபவர் பிரிட்னி ஸ்பியர்ஸ். இவருக்கு வயது முப்பத்தி ஒன்பது ஆகிறது. இவர் கடந்த 2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது நண்பரான ஜெய்சன் அலெக்சாண்டரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணம் நடந்து 55 மணி நேரத்தில், இந்த திருமணம் செல்லாது என்று நீதிமன்றம் அறிவித்தது. மேலும், பிரிட்னி ஸ்பியர்ஸ் தான் என்ன செய்கிறோம் என்று புரியாமல் செய்துள்ளார் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்த சில மணிநேரங்களில் கெவின் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவரின் இந்த திருமண வாழ்க்கையும் நீண்ட காலம் நீடிக்கவில்லை. கடந்த 2007ஆம் ஆண்டு இருவரும் ஒருமனதாக பிரிந்து செல்வதாக விவரத்தை பெற்றுக்கொண்டனர்.

இதனை அடுத்து கடந்த 2008ஆம் ஆண்டு பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் கட்டுப்பாட்டில் இருந்து வந்தார். அவரின் தந்தை ஜேமி ஸ்பியர்ஸ் கட்டுப்பாட்டில் இருந்ததினால் பிரிட்டினி ஸ்பியரின் பொருளாதாரம் உள்ளிட்ட வாழ்க்கை சார்ந்த எந்த ஒரு முடிவையும் அவருக்கு எடுக்க உரிமை மறுக்கப்பட்டது.

இதற்கிடையே உடற்பயிற்சி பயிற்சியாளரான சாம் அஸ்காரியை (வயது 27) காதல் செய்து திருமணம் செய்ய நீதிமன்றத்தில் அனுமதி கேட்டார். ஆனால், அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் தனது தந்தை கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணை மிக நீண்டகாலமாக நடந்து வந்த நிலையில், பிரிட்னி ஸ்பியர்ஸ்க்கு தந்தையின் பாதுகாப்பில் இருந்து வெளியேற அனுமதி வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில், பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது நீண்டகால காதலரான சாம் அஸ்காரியுடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக காதலர்கள் இருவரும் தங்களது நிச்சயதார்த்த மோதிரத்தை புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர்களின் திருமணம் எங்கு, எப்போது நடைபெறும் என்று அவர்கள் இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Britney Spears engagement


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->