பிக்பாஸ் போட்டியாளருக்கு கொரோனா தொற்று உறுதி.! தாமதமாகும் படப்பிடிப்புகள்.!  - Seithipunal
Seithipunal


அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகை ஹிமான்ஷி குரானா மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டார். 

அதன் பின்னர் பரிசோதனை செய்தபோது அவருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பஞ்சாபி திரைப்படங்களில் நடித்து வரும் இவர் பாடகியாகவும் இருக்கின்றார். மேலும் இந்தி பிக்பாஸ் 13 வது சீசனில் அவர் போட்டியாளராக பங்கேற்று இருக்கின்றார். 

சமீபத்தில் நடந்த மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் படப்பிடிப்புக்கு செல்வதற்காக பரிசோதனை செய்தபோது அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று நடிகை கோரிக்கை வைத்துள்ளார். போராட்டத்தின்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biggboss heroine attacked by corona


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal