பாய்ஸ் கேங்கின் வேலையால், அதிர்ச்சியில் தர்ஷன் அம்மா.! பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் பேமிலி.!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் இல்லத்தில் பல்வேறுவிதமான புதுமைகளை நிகழ்த்தி பிக் பாஸ் தன்னுடைய ரசிகர்களை பரபரப்பாக வைத்துள்ளார். இந்த நிலையில், அடுத்ததாக என்ன விஷயம் பிக்பாஸ் செய்யப்போகிறது என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை புரிவார்கள் என கூறப்பட்டது.

இந்த விஷயம் போட்டியாளர்களுக்கு, எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் சர்ப்ரைசாக நடக்கும் என கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் புதுப்புது மனிதர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது புதுவிதமான உணர்வையும், அனுபவத்தையும் பல்வேறு கலவையான உணர்வுகளையும் நமக்கு உருவாக்கியது.

அந்த வகையில் இன்று வெளியான ப்ரோமோவில் தர்ஷனின் தாயார் மற்றும் தர்ஷனின் தங்கை ஆகியோர் உள்ளே நுழைகின்றனர். உடனடியாக தர்ஷன் ஓடிச் சென்று அவர்களைக் கட்டித் தழுவி வரவேற்கிறார். பின்னர் வீட்டில் இருக்கும் அனைவரும் அவர்களை வரவேற்கின்றனர்.

இதனை தொடர்ந்து சாண்டி தர்ஷனின் அம்மாவிற்காக கேக் கட் பண்ண அவரை அழைக்கின்றார். இதன் காரணமாக சற்றும் எதிர்பாராத தர்ஷனின் தாயார் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகின்றார். இது பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கும், காண்போருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

biggboss dharshan family


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal