பிக்பாஸ் சீசன் 8 - மரண அப்டேட் கொடுத்த விஜய் டி.வி.! - Seithipunal
Seithipunal


தனியார் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒவ்வொரு ஆண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும். இந்த நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 

ஆனால், கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என்று  அறிவிப்பு வெளியிட்டார். இதனால், ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க போவது யார்? என்ற குழப்பம் நிலவி வந்தது. 

இதற்கிடையே பிக்பாஸ் – 8 சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி, அதற்கான டீசரும் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், பிக்பாஸ் – 8 நிகழ்ச்சியின் முன்னோட்டக் காட்சி வெளியிடப்படும் என்று விஜய் டிவி அறிவித்துள்ளது.

அதன் படி இன்று மாலை 5 மணிக்கு ப்ரோமோ வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், குக் வித் கோமாளி நடுவர் மாதம்பட்டி ரங்கராஜ், நடிகர் வினோத் பாபு, அருண், நடிகை பவித்ரா ஜனனி, அக்‌ஷிதா, குக் வித் கோமாளி பிரபலம் ஜோயா உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடக்க நாளில் யார் யார் பங்கேற்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss season 8 promo release


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->