மலரும் அரும்பு காதல்கள்.. கொண்டாட்டத்தில் பிக் பாஸ் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் இல்லத்திற்குள் ரியோ, நடிகை சனம் செட்டி, நடிகை ரேகா, பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி அர்ஜுனன், குத்து சண்டை வீரர் சோம சேகர், கேப்ரியல்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆர்ஜித் ஆகியோர் உள்ளனர்.

இந்நிலையில், பிக் பாஸ் இல்லத்தில் எப்போதும் காதல் தொடர்பான விஷயங்களுக்கு பஞ்சமே இருக்காது. இந்த சீசனில் கலந்துகொண்ட பலரும் திருமணம் முடிந்த அல்லது வயதான நபர்களாக இருக்கும் நிலையில், காதல் வலையில் விழ வைக்கவே என்பதை போல நான்கு நட்சத்திரங்களையும் களமிறக்கியுள்ளனர். 

இதில், கேப்ரியல்லா, பாலாஜி, ஷிவானி, ஆர்ஜித் ஆகியோர் இளம் சுட்டி நட்சத்திரங்களாக இருந்து வரும் நிலையில், இவர்களுக்குள் காதல் மலரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷிவானி இப்போதைக்கு யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார். 

ஆனால், கேப்ரியல்லா அனைவரிடமும் அழகாக பேசி வரும் நிலையில், பாலாஜி மற்றும் ஆர்ஜித் ஆகியோர் கேப்ரியல்லாவிடம் கூடுதல் அன்போடும், பாசத்தோடும் பேசி வருகின்றனர். இதனால் விரைவில் யார் யாரின் பிடியில் விழுவார்கள் என்பது காதல் காட்சிகள் வரும் போது உறுதியாகும். 

மேலும், மக்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்க வேண்டும் என்றே பல காட்சிகளை கட்டிங் செய்துள்ள நிர்வாகம், சின்ன சின்ன பேச்சுவார்த்தைகள் விஷயங்களையும் பின்னணி பாடலுடன் காதலாக மலரவும் வைக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bigg Boss Season 4 Love Mode Starts


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->