பிக்பாஸ் பிரபலங்களுடன், குத்தாட்டம் போட்டு ரகளை.! வைரலாகும் வீடியோ..! - Seithipunal
Seithipunal


தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் அனைவரும் அறிந்த ஒரு தனியார் தொலைக்காட்சி என்றால் அது விஜய் தொலைக்காட்சி என்றுதான் கூற வேண்டும். ஏனெனில்., இந்த தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை மூன்று சீசனிலும் பெற்றுள்ளது. 

பிக் பாஸ் சீசன் 3 தற்போது மூன்று மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த சீசனும் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக முடிவடைந்த நிலையில்., மக்களும் இதற்கு நல்ல வரவேற்பு கொடுத்தனர். 

மேலும்., பிக்பாஸ் முதல் மற்றும் இரண்டாம் சீசனில் இருந்த மாதிரியே நட்பு., காதல்., மோதல் மற்றும் உறவு என அனைத்தையும் வெளிப்படுத்தி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்று ரசிகர்களையும் தக்கவைத்து பெரும் சாதனை படைத்தது. 

பிக்பாஸ் முதல் மற்றும் இரண்டாம் சீசனை போலவே மூன்றாவது சீசனும் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் வெற்றி பெற்றது. இந்த சீசனின் முடிவில் மலேசிய நாட்டை சேர்ந்த முகைன் என்ற போட்டியாளர் வெற்றி பெற்றார். 

இதில் கலந்து கொண்ட நடன இயக்குனர் சாண்டி இரண்டாவது இடத்தை தக்கவைக்க நிலையில்., இலங்கையைச் சார்ந்த லாஸ்லியா மூன்றாவது இடத்தையும்., இந்தியாவை சார்ந்த ஷெரின் நான்காவது இடத்தையும் தக்கவைத்துக் கொண்டார். 

இந்த நிகழ்ச்சி நடைபெற்று முடிந்ததும் பிக்பாஸ் இல்லத்தில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில்., இது போன்ற கொண்டாட்டம் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்றது. 

இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் விஜய் டிவி தொகுப்பாளர்கள்., பிரபலங்கள் போன்றோர் பலர் கலந்து கொண்டு., இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேடையில் அனைவரும் ஒன்று போல் குத்தாட்டம் போட்ட வீடியோவானது தற்போது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss contestant celebration dance video


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->