பிக் பாஸ் 7: இந்த வாரம் வெளியேறியது யார்?  - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 10 வது வாரத்தை எட்டி உள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 

பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன் உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களில் இருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களின் இரண்டு பேர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்டு கார்டாக நுழைந்துள்ளனர். 

கடந்த வாரம் கூல் சுரேஷ் வெளியேறிய நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 12 பேர் வெளியேறி உள்ளனர். 

இந்த வாரம் சரவண விக்ரம், விசித்ரா, ரவீனா ஆகிய 3 பேர் நாமினேட் செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறைந்த வாக்குகள் பெற்ற அடிப்படையில் இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து சரவண விக்ரம் வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bigg Boss 7 this week update


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->