ஆம்பளை நடிகர் பண்ணதை.. நாங்க பண்ணா மட்டும் தப்பா.? நடிகை தடாலடி பேச்சு.!
Bhumika Shock Interview Why I Shouldnt Romance A Hero Who Is My Son Age
தென்னிந்திய மற்றும் பாலிவுட் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பூமிகா. இவர் விஜய் நடித்த பத்ரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்திருப்பவர். தமிழில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்து சேது திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சல்மான் கானுடன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தேரே நாம் என்ற பெயரில் இந்தியிலும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் பூமிகா ஹீரோக்கள் இளம் வயது ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்வதை ஏற்றுக் கொள்ளும் போது ஹீரோயின்களும் தங்களை விட வயது குறைந்த ஹீரோக்களுடன் ரொமான்ஸ் செய்வதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சமீபத்திய ஒரு பேட்டியின் மூலம் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.

ஹீரோக்கள் தங்கள் வயதை விட பாதி வயது குறைந்த நடிகைகளுடன் ஜோடியாக நடிக்கும் போது இதை ஏன் நடிகைகளும் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பி உள்ளார். வெப் சீரியஸ்களில் இந்த நிலைமை மாறி இருந்தாலும் கமர்ஷியல் சினிமாவில் இன்னும் மாறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நடிகர் தன் மகள் வயதை ஒத்த என்னுடன் ரொமான்ஸ் செய்யும்போது நான் ஏன் என் மகனின் வயதை ஒத்த ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்யக்கூடாது.? என கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தற்போது சினிமா உலகில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
English Summary
Bhumika Shock Interview Why I Shouldnt Romance A Hero Who Is My Son Age