ஓடிடியில் வெளியாகும் விஜயின் பீஸ்ட் திரைப்படம்..அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படத்தில் யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல பிரபலங்கள் பலரும்  இடம்பெற்றுள்ளனர். இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இல்லை என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், பீஸ்ட் திரைப்படம் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வருகிற மே-11 ஆம் தேதி வெளியாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Beast movie ott on May 11


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->