தொடர்ந்து வசூலை குவிக்கும் ''அயலான்'' - புதிய போஸ்டரை பகிர்ந்த படக்குழு! - Seithipunal
Seithipunal


ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தில் யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

24 ஏ எம் ஸ்டுடியோஸ் மற்றும் கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் கடந்த 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியான முதல் திரைப்படம் 'அயலான்'. 

இந்த திரைப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் குழந்தைகளை கவரும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் உலகம் முழுவதும் ரூ. 50 கோடி வசூலித்து சாதனை படைத்தது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வசூல் குறித்து புதிய அறிவிப்பை பட குழு வெளியிட்டுள்ளது. அதாவது, அயலான் திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ, 75 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayalaan movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->