அடடே அட்லீக்கு அடுத்தடுத்து அடிக்கும் யோகம்.. அடுத்த பட ஹீரோ இவரா.?!
atlee next movie with salman khan
இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கின்ற திரைப்படம் தான் ஜாவான். இந்த திரைப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் ஷாருக்கான் தயாரித்து நடிக்கும் திரைப்படமாகும்.
இதற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முதல் முறையாக பாலிவுட் படத்தில் நடிக்கிறார். நடிகை நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்க இருக்கிறாராம்.

இந்த திரைப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாக இருக்கிறது. நடிகர் விஜய் இந்த திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக பல்வேறு தகவல்கள் இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் மற்றும் விஜய் இருவரும் ஜாவான் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக கூறி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்த நிலையில், அட்லீ தன்னுடைய அடுத்த படத்தில் நடிகர் சல்மான் கானுடன் இணையப் போவதாக கூறப்படுகிறது. இது குறித்த, அறிவிப்பு விரைவிலேயே வெளியாகவுள்ளதாம். இதனால், அடுத்ததாகவும் பாலிவுட் படத்தை அட்லீ இயக்க இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
atlee next movie with salman khan