24 வயதில் சின்னத்திரை உலகின் ‘மில்லினியர் குயின்’...! -ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி
At age 24 Millionaire Queen small screen world Jannat Zubair Rahmani
திரை உலகில் 24 வயதிலேயே ரூ.250 கோடி சொத்துக்கு உரிமையாளர் என்றால் அது ஒரு கற்பனையே போல் தோன்றும். ஆனால் அது உண்மையென நிரூபித்திருப்பவர் பாலிவுட் டி.வி. நடிகை ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி.குழந்தை நட்சத்திரமாக ‘தில் மில்கே’, ‘காசி: அப் நா ராஹே தேரா கக்கா கோரா’, ‘புல்வா’ போன்ற தொடர்களில் அறிமுகமான அவர், இன்று முன்னணி நடிகையாக பிரபலமடைந்திருக்கிறார்.

சீரியல்களோடு மட்டுமல்லாமல் ‘பியர் பேக்டர்’ போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் கலக்கி, ஒவ்வொரு எபிசோடுக்கும் ரூ.18 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளார். காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சிகளில் கூட ஒரு எபிசோடுக்கு ரூ.2 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல்.
மேலும், சமூக ஊடகங்களில் ஒவ்வொரு பதிவுக்கும் ரூ.1.5 முதல் ரூ.2 லட்சம் வரையில் வருமானம் ஈட்டும் ஜன்னத், நடிகை மட்டுமல்லாமல் ரியல் எஸ்டேட் மற்றும் ஜவுளி துறையிலும் முதலீடு செய்து தொழிலதிபராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.
இவ்வளவு சிறிய வயதிலேயே சினிமா, தொலைக்காட்சி, தொழில், சமூக ஊடகம் என பல துறைகளில் பாய்ந்து ரூ.250 கோடி சொத்து சம்பாதித்திருப்பது, இவரை இன்றைய இளம் தலைமுறையின் ‘Inspiration Icon’ ஆக மாற்றியுள்ளது.
English Summary
At age 24 Millionaire Queen small screen world Jannat Zubair Rahmani