பிறந்தநாளில் இரத்த தானம் செய்து கொண்டாடிய பிரபல நடிகர்! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'யானை' திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஷன்' என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இவர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார். 

உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் இணைந்து பிறந்த நாளை கொண்டாடினார். 

அதன் பிறகு அருண் விஜய் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகள் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. அங்கு ரசிகர்களுடன் இணைந்து நடிகர் அருண் விஜய் ரத்ததானம் செய்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

arun Vijay birthday celebration


கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?Advertisement

கருத்துக் கணிப்பு

5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள், "2024 மக்களவை" தேர்தலில் எதிரொலிக்குமா?
Seithipunal
-->