தேவயானி மகள் என்பதால்தான் இனியாவை இவ்வளவு கொண்டாடுகிறார்களா?.. ராஜகுமாரன் சொன்ன தகவல்!
Are they celebrating Iniya so much just because she is Devayani daughter Information given by Rajakumaran
தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக ஜொலித்த தேவயானி— இப்போது தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும், நடிப்பிலும், டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பிசியாகத்தான் உள்ளார். தேவயானி–ராஜகுமாரன் தம்பதியின் இரண்டாவது மகள் இனியா, சமீபத்தில் ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். அவரது அற்புதமான பாடல் திறமை, நடுவர்களை மட்டுமில்லை, பார்வையாளர்களையும் கவர்ந்தது.
இதன் தொடர்ச்சியாக, இனியா தனியார் ஊடகம் வழங்கிய விருதைப் பெற்றார். மேலும், சில படங்களில் ஹீரோயினாக நடிக்க அழைப்புகள் வந்துள்ளன என்ற தகவலும் சுற்றிக் கொண்டிருக்கிறது. இதுவரை ராஜகுமாரனோ, தேவயானியோ இதுகுறித்து முடிவு எதுவும் எடுத்திருக்கவில்லை.
இந்நிலையில், இனியாவுக்கு வழங்கப்பட்ட விருது விழாவில் ராஜகுமாரன் பேசிய வார்த்தைகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
ராஜகுமாரன் கூறியதாவது:“இனியா ஏன் இவ்வளவு பேசப்படுகிறாளோ தெரியுமா? ‘தேவயானியின் குழந்தை’ என்பதால்தான் என்று சிலர் சொல்லிவிடுவார்கள்.ஆனால் உண்மையில் — தேவயானியின் குழந்தை என்பதால்தான் இனியா இவ்வளவு நன்றாக வளர்ந்திருக்கிறார்.அதை எல்லோராலும் செய்ய முடியாது.ஒரு ஸ்டார் அம்மா என்பதால், இனியாவை இன்னும் சிறப்பாக வளர்க்க தேவயானி பல மடங்கு எஃபர்ட் போட்டார்.இனியா இன்று பெறும் பாராட்டு, விருது — எல்லாமே தேவயானிக்கே சேர வேண்டிய மார்க்.”
ராஜகுமாரன் கூறிய இந்த உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள், சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.“ஸ்டார் கிட்ஸ் என்றாலே சுலபம் என்று நினைப்பவர்கள் முதலில் இதைப் பாருங்கள்”,“இனியாவின் திறமைக்கும், தேவயானியின் அர்ப்பணிப்புக்கும் சப்போர்ட்!”என்றெல்லாம் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
இனியா வருங்காலத்தில் சினிமா ஹீரோயினாக வருவாரா?அல்லது இசைக் களத்திலேயே தனக்கான அடையாளம் உருவாக்குவாரா?என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Are they celebrating Iniya so much just because she is Devayani daughter Information given by Rajakumaran