அந்த மாதிரி தப்பான படங்களை எல்லாம் ஆஸ்காருக்கு அனுப்புறாங்க.! இசைப்புயல் பளீச் டாக்.! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமா மட்டுமல்லாது உலக சினிமாவிலும் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர்  இசை புயல் ஏ ஆர் ரகுமான். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து தற்போது இந்த வருடம் நடைபெற்ற ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடல் ஆஸ்கார் விருதை வென்றது. இந்தப் பாடலுக்கு இசையமைத்ததற்காக கீரவாணிக்கு  ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஏ ஆர் ரகுமான் ஒரு நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி இருக்கிறது. அந்தப் பேட்டியில் தன்னுடைய இசை உலக பயணம் பற்றியும் ஆஸ்கார் விருதுகளுக்கு எந்த மாதிரியான திரைப்படங்கள் சிபாரிசு செய்யப்படுகின்றன என்பது பற்றியும் விரிவாக பேசியிருந்தார் ஏ ஆர் ரகுமான்.

இது பற்றி பேசியிருந்த அவர் "நம்மால் ஹாலிவுட் இசையை கேட்கும் போது ஏன் அவர்களை நம் இசையை  கேட்க வைக்க முடியாது போன்ற கேள்விகளை தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவிலிருந்து பல்வேறு படங்கள் ஆஸ்கார் விருதுகளுக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. அதை நாம் பார்க்கின்றோம் ஆனால் அவர்களுக்கு ஆஸ்கார் விருதுகள் கிடைப்பதில்லை. ஆஸ்கார் விருதுகளுக்கு தவறான படங்கள் பரிந்துரைக்கப்படுவதாக பளிச்சென அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ar rahman speaks about india movies recommended for oscars


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->