மகனுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.! மகன் வெளியிட்ட பதிவு.!  - Seithipunal
Seithipunal


கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சைனாவின் வுகாண் நகரில் கொரோனா வைரஸ் உருவாகி பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவியதன் காரணமாக கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டு முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வந்தது. 

பின்னர், வைரஸின் தாக்கம் மெல்ல குறைந்தவுடன் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி எடுக்கிறது. இதனால், பலரும் உயிருக்குப் போராடி அன்றாடம் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. 

சர்ச்சைகளை முறியடித்து முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட புகைப்படம்!  ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்.! - Seithipunal

பிணத்தை எரிக்கவோ மருத்துவமனைகளில் படுக்கைக்கோ இடம் கிடைக்காமல் மக்கள் அன்றாடம் அல்லாடி வரும் செய்திகளை காணமுடிகிறது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு பிரபலங்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது விதி முறைகளை கடைப்பிடிப்பது என்று முயற்சித்து வருகின்றனர். 

இந்த நிலையில் தற்போது பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும், அவரது மகனும் தடுப்பூசி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். இதுகுறித்து அவருடைய மகன் அமீன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஊசி போடும் போது தந்தையுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AR rahman and sond took vaccine


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவுAdvertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் தேர்வு இரத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள முடிவு
Seithipunal