டீசன்ட்டான அப்ரோச்; என்.ஆர்.ஐ பார்ட்டி; நாசுக்காக கட் செய்த சின்னத்திரை பிரபலம் தேவிப்ரியா!
another serial actress open up about the adjustment controversy
நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினைகள் காலம் காலமாகவே சின்னத்திரையிலும் சினிமா துறையிலும் இருந்து வருகின்ற ஒன்று. மார்க்கெட்டில்லாத காலங்களில் ஒரு சில நடிகைகள் தடம் மாறி சென்றதால் எல்லா நடிகைகளையும் அதே கண்ணோட்டத்தில் அணுகும் நடைமுறை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
சமீபத்தில் தனக்கு நேர்ந்த இது போன்ற ஒரு சம்பவத்தை தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையான தேவி பிரியா. இவர் சின்னத்திரையில் மாப்பிள்ளை, சந்திரகுமாரி, விதி, நீலி, பாசமலர், போன்ற தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர்.

இது பற்றி பேசிய தேவி சில நாட்களுக்கு முன்பு பெங்களூரிலிருந்து தனக்கு ஒரு போன் கால் வந்ததாகவும் அதில் பேசிய நபர் மிகவும் நாகரிகமான முறையில் நல்ல ஆங்கிலத்தில் பேசினார் என்றும் பெங்களூரில் நடக்க இருக்கின்ற ஒரு நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வேண்டும் எப்போது வருகிறீர்கள்? என்று கேட்டார். நான் நிகழ்ச்சி நடக்கும் அன்று காலை வந்து விட்டு மாலையில் சென்று விடுவேன் என கூறினேன். அதற்கு அந்த நபர் ஒரு புகழ்பெற்ற என்.ஆர்.ஐ ஏற்பாடு செய்திருக்கும் இரவு விருந்திலும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பழக்கம் எனக்கு இல்லை என்று கூறி நான் அழைப்பை துண்டித்து விட்டேன் என்று கூறினார். அதன் பிறகும் இவரை தொடர்பு கொண்ட அந்த நபர் இவரது பிஆர்ஓ மற்றும் மேனேஜரின் எண்களை கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்துள்ள நடிகை உங்களின் நோக்கம் நன்றாக புரிகிறது அப்படிப்பட்ட நடிகை நான் இல்லை எனக் கூறி அழைப்பை துண்டித்ததாக தெரிவித்துள்ளார்.
English Summary
another serial actress open up about the adjustment controversy