பட்டையை கிளப்பும் அண்ணாத்த டீசர்.! வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது, அண்ணாத்த படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இந்த திரைப் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு போன்ற நிறைய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். 

கடந்த விநாயகர் சதுர்த்தி நாளில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது.  இந்த திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது. 

அக்டோபர் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் முதல் பாடல் தற்போது யூடியூபில் ட்ரெங்கில் இடம் பிடித்துள்ளது. இந்த பாடல் மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடிய பாடல் என்பதும், இந்த பாடல் அவர் பாடிய கடைசி பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடிகர் ரஜினி அண்ணாத்த படத்தில் நடிகை நயன்தாராவுடன் டூயட் பாடல் வெளியாகியது. இந்நிலையில், ஆயுதபூஜை நாளான இன்று அண்ணாத்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

annatha teaser viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal