ஹீரோயினாகும் அஜித் மகள் அனிகா.! இதுக்கு மேல தான் ஆட்டமே இருக்கு.!  - Seithipunal
Seithipunal


மலையாள சினிமாவில் நடித்து மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இருப்பவர் அனிகா சுரேந்திரன். சோட்டா மும்பை என்ற மலையாள படத்தில் தன்னுடைய மூன்று வயதில் அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். இதனை தொடர்ந்து அவர் பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கின்றார். 

தமிழில் தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விசுவாசம் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கின்றார். மேலும், நானும் ரவுடிதான், மிருதன், பாஸ் என்கிற பாஸ்கரன், உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்து இருப்பார். தற்போது அவருக்கு 15 வயதாகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அணிகா அவ்வப்போது சில கவர்ச்சி புகைப்படங்களை போட்டோ ஷூட் செய்து வெளியிடுவது வழக்கம்.

அஜீத்தின் படத்தில் மகளாக அவர் நடித்ததால் தல ரசிகர்கள் அவருடைய கவர்ச்சி புகைப்படங்களை கண்டு பொங்கி எழுந்து கமெண்ட் செய்வது வழக்கம். இந்நிலையில், அனிதாவின் போட்டோ ஷூட்டிற்க்கு பலன் கிடைத்துவிட்டது. 

தற்போது அவர் மலையாள படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புதுமுகங்கள் நடிக்கும் இந்த படமானது பள்ளி மற்றும் கல்லூரி காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படமாகும். இருப்பினும், தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பது அனைவரும் அறிந்ததே.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anika surenthiram may acting as heroine in Malayalam movie 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->