மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன்.! வெளியான புதிய தகவலால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கல்லீரல் பிரச்னையால் கடுமையாக அவதிப்பட்டு வரும் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அமிதாப் பச்சனின் குடும்ப உறுப்பினர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது சிகிச்சை முடிந்து நேற்றிரவு அமிதாப் பச்சன் வீடு திரும்யுள்ளார்.

 கடந்த 1982 ஆம் ஆண்டு நடந்த விபத்து ஒன்றில் அமிதாப் பச்சன் சிக்கினார். அப்போது அவருக்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் ‘ஹெப்பாடிட்டீஸ் பி&rsquo, எனும் வைரஸ் இருந்துள்ளது. இதனால் அவரது கல்லீரல் 75 சதவீதம் செயலிழந்தது. இதன் காரணமாக கல்லீரல் பிரச்னையால் அவதிப்பட்டு வரும் அவர், சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து சுறுசுறுப்பாக தான் இருந்து வருகிறார்.  

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது, இதையடுத்து அன்றிரவே  மும்பை சிட்டி மருத்துவமனையில் அமிதாப் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு இணையான தனி அறையில், கடந்த நான்கு நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amithabtachan return to home


கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
கருத்துக் கணிப்பு

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமர்சித்து வருவது..
Seithipunal