ஆண்டி நடிகையா நானு? பாடி ஷேமிங் பண்ணாதீங்க.. குண்டாக இருப்பது தவறு இல்லை.. நடிகை இனியா பதிலடி! - Seithipunal
Seithipunal


‘வாகை சூடவா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற நடிகை இனியா, தற்போது நடித்துள்ள அடல்ட் காமெடி படம் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாள தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் குறும்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இனியா, பின்னர் மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழில் ‘வாகை சூடவா’ படத்தின் மூலம் ஹீரோயினாக வந்த அவர், அதன் வெற்றிக்குப் பிறகு ‘நான் சிகப்பு மனிதன்’, ‘புலிவால்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில், சமீபத்தில் வெளியான ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ என்ற படத்தில் இனியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான இந்த படம் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஆபாச நகைச்சுவை மற்றும் இரட்டை அர்த்த வசனங்களுடன் வெளியாகியுள்ளது. இதில் த்ரிகுண் நாயகனாக நடித்துள்ள நிலையில், ஜீத்தா கோஷ், ராதா, ரவி மரியா, தம்பி ராமையா, சத்யன், சாம்ஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இனியாவிடம், “வாகை சூடவா படத்தில் ஒல்லியாக இருந்தீர்கள். தற்போது உடல் எடை அதிகரித்து இருக்கிறீர்கள். இதனால் தான் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இந்த கேள்விக்கு பதிலளித்த இனியா, “நான் தொடர்ந்து ஹீரோயினாகவே நடித்துக் கொண்டு இருக்கிறேன். சமீபத்தில் எனக்கு கால் மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதனால் சரியாக உடற்பயிற்சி செய்ய முடியவில்லை. இதுவே உடல் எடை அதிகரிக்க காரணம். ஒரு நடிகை குண்டாகிவிட்டார் என்பதற்காக அவர் ஆன்ட்டி அல்லது அக்கா கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. குண்டாக இருப்பது தவறு அல்ல. ஒல்லியாக இருந்த பல நடிகைகள் இப்போது திரையுலகில் இல்லை. ஆனால் நான் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

இனியாவின் இந்த பதில் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளதுடன், உடல் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு விமர்சிப்பதை எதிர்க்கும் குரலாகவும் பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Am I an actress Donot body shame me Being fat is not wrong Actress Iniya response


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->