தனது கனவை நிறைவேற்றும் சந்தியா.! போலீஸ் உடையில் மாஸ் புகைப்படம்.!
alya manasa post about her serial character
சின்னத்திரை ரசிகர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு பெருமளவு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். அதிலும் விஜய் டிவி சீரியல்களுக்கு என்று பிரத்தியேக ரசிகர்கள் இருக்கின்றனர்.
அந்த வகையில், என் கணவன் என் தோழன் தொடரின் அதிகாரப்பூர்வ ரீமேக் ராஜா ராணி இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்த தொடரில் ஆலியா மனசா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இவர் நடிகை மட்டுமல்லாமல் தொகுப்பாளினியாகவும் பணியாற்றி வருகின்றார். இவரது கொழுக், மொழுக் கண்ணமும் முட்டைக் கண்களும் பார்ப்பதற்கே கொள்ளை அழகாக இருக்கும். இதனால் ரசிகர்கள் மத்தியில் ஆலியாவிற்கு மிகுந்த வரவேற்பு கிடைக்கும்.
ஆலியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக வீடியோக்கள், போட்டோஷூட்டுகள், டப்மாஸ் வீடியோக்கள் வெளியிட்டு வருவது வழக்கம். இந்த நிலையில், ஆலியா மானசா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது.

ராஜா ராணி 2 சீரியலில் ஆல்யா மானசா கதாநாயகியாக சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஐபிஎஸ் படித்து போலீஸ் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் சந்தியா, மாமியார் வீட்டில் பெரும் கஷ்டத்தை அனுபவிக்கிறார்.
இந்த சூழலில்தான், ஆல்யா மானசா, ஐபிஎஸ் போலீஸ் உடையை அணிந்து கொண்டிருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
என்னுடைய இந்த லுக்கை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றும் ஆல்யா மானசா தெரிவித்துள்ளார். இதன் மூலமாக, ராஜா ராணி 2 சீரியலில் ஐபிஎஸ் கனவுடன் இருக்கும் சந்தியா விரைவில் ஐபிஎஸ் ஆகிறார் என்பது தெரிகிறது.
English Summary
alya manasa post about her serial character