விஜயை ஹிட் கொடுத்த இயக்குநர்களை வரிசையாக தேர்வு செய்யும் அல்லு அர்ஜுன்!அட்லீக்கு அடுத்து யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஒருகாலத்தில் இந்திய சினிமா என்றாலே பாலிவுட் என பார்க்கப்பட்ட சூழலை முற்றிலும் மாற்றி எழுச்சி கண்டது தென்னிந்திய சினிமா. பச்சன்கள், கான்கள் நிறைந்த பாலிவுட்டைத் தாண்டி, பான் இந்திய அளவில் பெரும் வசூல் சாதனைகளை நிகழ்த்திய படங்கள் தென்னிந்தியாவிலிருந்து தொடர்ந்து வந்தன. பாலிவுட் படங்கள் தென்னிந்தியாவை சென்றடைந்தாலும், தென்னிந்திய படங்கள் நேரடியாக பாலிவுட் பாக்ஸ் ஆபீஸையே கைப்பற்றியது இன்றைய நடைமுறையாக மாறியுள்ளது.

இந்த மாற்றத்தில் தெலுங்கு சினிமாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், புஷ்பா, புஷ்பா 2, கல்கி கி.பி 2898 போன்ற படங்கள் இந்திய சினிமாவின் எல்லைகளை விரிவாக்கி, தேசிய அளவில் பாக்ஸ் ஆபீஸை ஆட்டிப்படைத்தன. அதேபோல் கன்னட சினிமாவில் கே.ஜி.எஃப், கே.ஜி.எஃப் 2, காந்தாரா சாப்டர் 1 போன்ற படங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.

இந்த சூழலில், பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக மாறியுள்ள அல்லு அர்ஜுன், புஷ்பா 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தனது அடுத்த படத் தேர்வுகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, விஜயை வைத்து மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற முடிவில் அவர் உறுதியாக செயல்பட்டு வருகிறார்.

அந்த வரிசையில், புஷ்பா 2க்கு பிறகு அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லீயுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ரூபாய் 175 கோடி சம்பளம் என்றும், அட்லீக்கு ரூபாய் 100 கோடி சம்பளம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சூப்பர் ஹீரோ பின்னணியில் உருவாகும் இந்த படம் சர்வதேச அளவிலும் கொண்டு செல்லப்படலாம் என படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதோடு மட்டும் அல்லாமல், அட்லீ படத்தை முடித்ததும் அல்லு அர்ஜுன், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து படம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அல்லு அர்ஜுனே நேரடியாக லோகேஷ் கனகராஜுக்கு போன் செய்து இணைந்து படம் பண்ணலாம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த அழைப்பால் உற்சாகமடைந்த லோகேஷ் கனகராஜ், தற்போது கதையை தயாரிக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி வெளியானதும், கோலிவுட் வட்டாரங்களில் ஒரு சுவாரசியமான விவாதம் எழுந்துள்ளது. அதாவது, அல்லு அர்ஜுன் தமிழ் சினிமாவிலிருந்து தேர்வு செய்யும் இயக்குநர்கள் அனைவரும் விஜயை வைத்து மாஸ் ஹிட் படங்களை கொடுத்தவர்கள் என்பதே அந்த பேச்சின் மையமாக உள்ளது. இதன் மூலம், பான் இந்திய சினிமாவில் விஜய் இயக்குநர்களின் மார்க்கெட் எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பதும் மீண்டும் உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Allu Arjun chooses directors who gave Vijay hits in order Do you know who will be next for Atlee


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->