அம்பானி வீட்டு திருமணத்தில் அசத்தலாக ஐஸ்வர்யா ராய் செய்த செயல், வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் மிக பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி மற்றும் நீட்டா அம்பானியின் மகள் இஷா அம்பானி.

இஷா அம்பானிக்கும், பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான அஜய் பிராமலின் மகன் ஆனந்த் பிராமலினுக்கும்  நேற்று முன்தினம் மிகவும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

மேலும் அந்த திருமண விழாவில் திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரபலங்கள் என  பலரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இந்நிலையில்  இந்த நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன், மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார். அப்பொழுது ஐஸ்வர்யா சிவப்பு நிற டிசைனர் சேலை அணிந்து மிகவும் அழகாக வந்திருந்தார். 

அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ராய் திருமண விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு உணவு பரிமாறும் வேலையையும் மிகவும் அக்கறையுடன் செய்துள்ளார். 

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

aishwarya rai distribute food in isha ambani marriage


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal