மறுப்பு தெரிவித்த நடிகை அதிதி மேனன் மீது நீதிபதி பாய்ச்சல்! வேறு வழியின்றி சரண்டர் ஆன நடிகை!
aditi menon divorce case
பட்டாதாரி, கேரள நாட்டிளம் பெண்களுடனே ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் அபி சரவணன். அட்டகத்தி படத்தில் துணை நடிகராக அறிமுகமானர். இவர் 2016 ஆம் ஆண்டு பட்டாதாரி படத்தில் நடிகை அதிதி மேனனுடன் இணைந்து நடித்தார். அப்போது அபி சரவணனுக்கும் அதிதி மேனனுகும் இடையே காதல் மலர்ந்தது. இதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் பிரிந்து விவாகரத்து கேட்டு இருவருமே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 
இந்தநிலையில், இவர்களது வழக்கு மதுரை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது நடிகர் அபிசரவணன் மற்றும் நடிகை அதிதி மேனன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். விசாரணையின் போது, குடும்ப நல கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள முடியாது என்றும், வழக்கை உயர்நீதிமன்றம் மூலமாக சந்திக்க உள்ளதாக அதிதிமேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதிதிமேனனின் இந்த பதிலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, கண்டிப்பாக நீதிமன்ற கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து அதிதிமேனன் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார்.