இன்று கவர்ச்சி புயல்., ஆபாச பட நடிகை.! சன்னி லியோனின் வாழ்க்கையில் விளையாடிய விதி., படப்பிடிப்பில் கண்ணீர் விட்டு அழுத சோகம்.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்., சில நடிகைகள் தங்களின் உடல் கவர்ச்சியை காட்டி., அதனை புகைப்படங்களாக பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்த விஷயத்தை பெரும்பாலான நடிகைகள் தங்கள் வசம் திரைப்படம் இல்லாத பட்சத்தில் இது போன்ற ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக திரைத்துறை வட்டாரங்களில் இருந்து பேச்சுக்கள் எழுகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படும் புகைப்படங்களை காணும் ரசிகர்கள்., சில நேரத்தில் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிப்பதும்., சில ரசிகர்கள் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று கடுமையான கேள்விகளை எழுப்பி கழுவி ஊற்றுவதும் இணையத்தளத்தில் நடக்கும் கூத்துகளில் ஒன்றாக மாறிவிட்டது. 

இது ஒரு புறமிருக்க திரைத்துறையில் நடித்து எப்படியாவது பெரிய நடிகை ஆகிவிட வேண்டும்., ரசிகர்களை அதிகளவு தக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல இளம் நடிகைகள் முதலில் நடிக்க துவங்கிய பின்னர்., கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தங்களுக்கான பட வாய்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும்., இதனை உபயோகம் செய்து கொள்ள நினைக்கும் பல ஆண்கள்., இந்த சமயத்தில் தங்களின் வக்கிர புத்தியை உபயோகம் செய்து இளம் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து அவர்களின் பிற்கால வாழ்க்கையை கேள்விக்குறியாக்குகின்றனர். 

இந்திய திரையுலகம் மட்டுமல்லாது பல திரையுலகிலும் பல நடிகர்களை மற்றும் நடிகைகளை அறிந்துள்ளார்களோ இல்லையோ., நடிகை சன்னி லியோனை அறிந்து வைக்காத நபர்களே இல்லை என்று தான் கூற வேண்டும். இன்றுள்ள பல இளைஞர்களுக்கு தெரிந்த ஆபாச பட நடிகை., இவரது பெயரை தப்பி தவறி நமது வீட்டிலேயே அல்லது உறவினர்கள் முன்னிலையிலோ வாய் தவறி கூறி விட்டோம் என்றால்., இவரது பெயரை கூறி ஒரு பாடல் வெளியாகியுள்ளது என்று கூறினால் கூட செருப்படி நமது இல்லத்தில் நிச்சியம். 

அந்த அளவிற்கு பெயர் பெற்ற ஆபாச நடிகையாக இவர் திகழ்ந்து வரும் நிலையில்., நாம் அறியாத இவரின் வாழ்வில் ஏற்பட்ட துயரத்தாலேயே இவர் இன்று இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதை நாம் அறிந்தும் ஏனோ அதனை ஏற்க மறுக்கிறோம். பொதுவாக இந்த உலகில் உள்ள அனைவருக்கும் முற்கால வாழ்க்கை மற்றும் பிற்கால வாழக்கை என்று இருபக்கம் இருக்கும். முற்கால வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தை பொறுத்தே பிற்கால வாழ்க்கை அமைகிறது. 

தனது வாழக்கையில் பல இன்னல்களை அனுபவித்த நிலையில்., இவர் தமிழ் திரையுலகில் வீரமாதேவி திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரது வாழ்க்கை வரலாறானது இணைய குறும்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டு., கரண்ஜித்கவுர் என்று பெயர் சூட்டப்பட்டு எடுக்கப்பட்டது. இந்த குறும்படமானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த குறும்படத்தின் படப்பிடிப்பின் சமயத்தில் தனது வாழ்க்கையில் நடத்த இன்னல்களை எண்ணி திடீரென கண்ணீர் விட்டு அழுதுள்ளார். 

இதனை கண்ட படக்குழு அவரிடம் சென்று கேட்ட போது., சிறுவயதிலேயே பெற்றோரை இழந்து தவித்து வந்த நிலையில்., திரைத்துறையில் ஆபாச பட நாயகியாக உள்ளேன்., திரைத்துறையில் அறிமுகமாகிய மற்றும் அதற்கு முன்னதாகவே என் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்த நிலையில்., திடீரென வரும் பழைய நினைவுகள் காரணமாக என்னை அறியாமலேயே கண்ணீர் வருகிறது. என்னதான் நான் அதனை மறக்க நினைத்தாலும் என்னால் முடியவில்லை என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actress sunny leone speech about her past life and crying in shooting spot


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->