சமந்தாவுக்கு என்னதான் ஆச்சு? எழுந்து நடக்கக்கூட முடியாமல் அவதி. 
                                    
                                    
                                   Actress Samantha suffering could not even walk
 
                                 
                               
                                
                                      
                                            நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த பிரச்சனையில் இருந்து ரசிகர்களின் அன்பினால் கடினமான காலத்தை கடந்து வருவதாகவும் உருக்கமாக பதிவிட்டு இருந்தார். 
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது யசோதா திரைப்படத்திற்கான டப்பிங் பணியில் ஈடுபட்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இந்த மாதம் முதல் வார தொடக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். 

இந்த நிலையில் திடீரென உடல்நிலைக் குறைவு காரணமாக சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால் அவர் வீட்டில் நலமுடன் ஓய்வெடுத்து வருவதாக உதவியாளர் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் நடிகை சமந்தா கட்டிலை விட்டு இறங்கி சிறிது தூரம் கூட நடக்க முடியாத நிலையில் இருப்பதாக தெலுங்கு சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சமந்தா விரைவில் குணமடைய திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       Actress Samantha suffering could not even walk