பூஜா ஹெக்டேவின் சூட்கேசை திருடிய மர்ம நபர்.. மாற்று உடை இல்லாமல் அவஸ்தை.! - Seithipunal
Seithipunal


விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் மேக்கப் பொருட்களை வைத்திருந்த பூஜாவின் மர்ம நபர் ஒருவர் திருடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. சமீபத்தில் இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தி என பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரான்சில் நடைபெற்றுவரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகை பூஜா ஹெக்டேவும் கலந்து கொண்டுள்ளார். அங்கு கவர்ச்சி உடையில் கலந்து கொண்ட அவர் திரைப் பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தார். கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்முறையாக அவர் கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில் இவ்விழாவில் சில சிக்கல்களையும் சந்தித்துள்ளார் பூஜா ஹெக்டே. அதாவது விலை உயர்ந்த ஆடைகள் மற்றும் மேக்கப் பொருட்கள் அடங்கிய பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் திருடு போயுள்ளது. இதனால் பூஜா ஹெக்டே மற்றும் அவரது உதவியாளர்கள் பதட்டத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் ஒரு வழியாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்ச்சியை சிறப்பாக முடித்தாராம் பூஜா ஹெக்டே. ஏற்கனவே தனது சூட்கேஸ் ஒன்றை இந்தியாவில் தனது காரில் விட்டு சென்றுள்ள நிலையில், மேலும் ஒன்று பாரிஸில் தொலைந்து போய் உள்ளது. இதில் நல்ல வேளையாக அவர் எடுத்து வந்த விலை உயர்ந்த ஆபரணங்கள் அவரிடம் பத்திரமாக இருக்கிறதாம். இச்சம்பவத்தால் அவர் சற்று மனமுடைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress pooja Hegde suitcase theft in Cannes


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->