நாங்கல்லாம் உக்காந்திருப்போம்.. சின்ன பையன் மாதிரி சுறுசுறுப்பா இருப்பார்... ரஜினிகாந்த் குறித்து, நிவேதா தாமஸ் மாஸ் பேச்சு.! - Seithipunal
Seithipunal


நடிகர் கமலஹாசனுடன் பாபநாசம், விஜய்யின் ஜில்லா படங்களில் நடித்தவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் " நவீன சரஸ்வதி சபதம் " திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த நிலையில், நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்தில், அவருக்கு மகளாக நடித்திருந்தார். 

தற்போது, நடிகை நிவேதா தாமஸ் ரஜினி குறித்து பேட்டியளித்தார். இந்த பேட்டியில், " ரஜினிகாந்துடன் ஒரு காட்சியில் நடித்துவிட்டால் போதும், தனக்கான அங்கீகாரம் கிடைத்தும் விடும் என்ற எண்ணத்தில் பலரும் இருந்து வருகின்றனர். 

நான் அவருக்கு மகளாக நடித்தது எனது அதிஷ்டம் என்றே கூறுவேன். ரஜினி வயதில் பெரியவர். ஆனால், அவரது செயல்கள் மற்றும் சுறுசுறுப்புத்தனம் அனைத்தும் இளம் வயதுள்ள நபரை போல இருக்கும். படப்பிடிப்பு தளங்களில் எந்த நேரமும், சின்ன பையன் போல இருப்பார். 

என்னைப்போல இளம் வயதுள்ள நபர்கள் அமர்ந்திருப்போம். அவர் அங்கும் இங்குமாக சென்றுகொண்டு இருப்பார். என்னை முதல் முறை பார்த்ததும், " இந்த பொண்ணு நல்லா நடிக்குதே... நான் நிறையா படத்துல உன்னை பார்த்திருக்கேன் " என்று தெரிவித்தார். இது எனக்கு பெருமையாக இருந்தது.

படப்பிடிப்பு தளங்களில் என்ன நடக்கிறது என்பதையெல்லாம் கவனிப்பார். அவருடன் இருந்தால் சத்தான உணவு மற்றும் ஆன்மீக விஷயங்கள் குறித்து தெளிவுபட பேசுவார். தினம் இரண்டு வேலை யோகா செய்வார். உணவு கட்டுப்பாட்டை கடுமையாக கடைபிடிப்பார். அவரது இளமை மற்றும் சுறுசுறுப்பின் ரகசியம் இதுவே. அவரிடம் பல விஷயங்களை நான் கற்றுக்கொண்டேன் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Nivetha Thamos Speech about Rajinikanth


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal