இவர் மேல தான் எனக்கு ஆசை.. மாளவிகா பகீர்.. ரசிகர்கள் திகீர்.!! - Seithipunal
Seithipunal


நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘மாஸ்டர்’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படம் கொரோனா ஊரடங்கு முடிந்த பின்னர் தியேட்டரில் வெளியாக காத்திருக்கிறது.

நேற்று தனது பிறந்தநாளை மாளவிகா மோகனன் கொண்டாடினார். மாஸ்டர் படக்குழுவினர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.சமூக வலைத்தளத்தில்  இது வைரலானது.

தனது சமூக வலைத்தள பக்கத்தில் மாளவிகா மோகனன் அதனைத் தொடர்ந்து ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். இதில் ஒரு ரசிகர், “ஒரு முறையாவது நீங்கள் பணியாற்ற விரும்புகின்ற இயக்குனர் கோலிவுட்டில் யார்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு மாளவிகா மோகனன், வெற்றிமாறன் என பதிலளித்து தான் அவரது ரசிகை என்றும், தனக்கு அவரது படங்கள் மிகவும் பிடிக்கும் எனவும் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Malavika Mohanan


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal