அந்த கேவலமான.., கமலஹாசனுக்கு மூக்கு உடைப்பு! நடிகை லட்சுமி மேனன் அதிரடி கருத்து! - Seithipunal
Seithipunal


சினிமா பிரபலங்கள் நடிக்க வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களை கொண்டு, 100 நாட்கள் ஒரு வீட்டில் அடைத்து, அதனை காணொளி மூலம் நிகழ்ச்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை, பிரபல தமிழ் இளம் நடிகை லட்சுமிமேனன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நடிகை லட்சுமிமேனன் பிக்பாஸில் கலந்து கொள்ளப் போவதாக செய்திகள் அண்மையில் வெளிவந்தன. இதுகுறித்து நடிகை லட்சுமி மேனனிடம் பலர், 'நீங்கள் பிக்பாஸில் கலந்து கொள்ளப் போகிறீர்களா?' என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் கோபமான நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிலடி தரும் வகையில் பதிவிட்டுள்ளார்.

நடிகை லட்சுமிமேனனின் அந்த பதிவில், "நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மற்றவர்களின் தட்டுகளை நான் கழுவ போவதும் இல்லை. 

அவர்கள் பயன்படுத்தும் பாத் ரூமை நான் இப்போதல்ல, எப்போதும் சுத்தம் செய்யப் போவதில்லை. நிகழ்ச்சி என்ற பெயரில் கேமரா முன் சண்டை போடவும் போவதில்லை.

இதன் பிறகும் ஏதோ ஒரு கேவலமான நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வதாக வதந்திகளை யாரும் என்னிடம் கொண்டு வர மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

என்னிடம் யாராவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் கலந்துகொள்ள போறீங்களா? என்று கேள்வி எழுப்பும் போது அது எனது மனதை கஷ்டப்படுகிறது. மற்றவர்களின் விருப்பத்தை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்" என்று நடிகை லட்சுமி மேனன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress lakshmi Menon open talk about big boss


கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
கருத்துக் கணிப்பு

பீகார்: பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இலவச கொரோனா தடுப்பூசி..
Seithipunal