நடிகை கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்த 'ஓ மை கடவுளே' படத்தின் நாயகன்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலியில் இன்று நடிகர் அசோக் செல்வன், நடிகை கீர்த்தி பாண்டியன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அசோக் செல்வன். இவர் சூது கவ்வும், ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 

சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'போர் தொழில்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. 

நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியன், அசோக் செலவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. 

இந்நிலையில் இன்று திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் இவர்களது திருமணம் நடைபெற்றது. 

இந்த திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actress Keerthy Pandiyan married Oh My God film hero 


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->