வெற்றிகரமாக காதலனை கரம் பிடித்த நடிகை சாந்தினி!
வெற்றிகரமாக காதலனை கரம் பிடித்த நடிகை சாந்தினி!
நடிகை சாந்தினி தமிழரசன், பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் உருவான சித்து +2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். இவரது நடிப்பில் வஞ்சகர் உலகம், ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் வெளியானது.

அரவிந்த்சாமியின் வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில், சாந்தினிக்கும் அவரது காதலரும், நடன இயக்குநருமான நந்தாவுக்கும் இருவீட்டாரது சம்மதத்துடன் திருமண நிச்சயசதார்த்தம் நடந்தது.
இந்நிலையில் இவர்களின் திருமணம் மணமகன் மற்றும் மணமகள் வீட்டார் சம்மதத்துடன் இன்று இந்து முறைப்படி திருப்பதியில் நடந்து முடிந்தது.

அதனைத்தொடர்ந்து 16ந் தேதி சென்னையில் வைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
actress Chandini is today love marriage to dance master nandha