நடிகர் விஜயின் 'தி கோட்' படம் வெளியானது..! நடிகர் அஜித் வாழ்த்து! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் ‘தி கோட்’ படம் இன்று வெளியானதையொட்டி நடிகர் அஜித் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய், வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்துள்ள படம் 'தி கோட்' , இந்த படத்தில் விஜயுடன் நடிகர்கள் பிரபுதேவா, பிரசாந்த், சிநேகா, மோகன், மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இன்று வெளியாகியுள்ள திரைப்படம் 'தி கோட்' . இந்த படத்தை ஏஜிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்த படத்திற்காக, அதிகாலையில் இருந்து ரசிகர்கள் திரையரங்குகளின் முன்பு ஆடி பாடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை பெற்று இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ள இந்த 'தி கோட்' திரைப்படத்துக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, இந்த படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் அஜித் குமார். இது குறித்து வெங்கட்பிரபு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது  “நன்றி தல. விஜய் அண்ணாவுக்கு, எனக்கு மற்றும் ‘தி கோட்’ படக் குழுவினருக்கு முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்த ஏ.கே விற்கு மிக்க நன்றி. நாங்கள் அனைவரும் உங்களை அதிகமாக நேசிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Vijay's film The Goat released Congratulations to actor Ajith


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->