பிரபல இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை.. சோகத்தில் திரைத்துறையினர்.!! - Seithipunal
Seithipunal


கன்னட தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர் சுஷீல் கவுடா. அந்தபுரம் என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானசுஷீல் கவுடா. 

நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் கவுடா இருந்துள்ளார். 30 வயதாகும் இவர் மண்டியாவில் வசித்துவந்தார். நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சலாகா என்ற திரைப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இப்படத்தில்  துனியா விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். சுஷீல் மரணம் குறித்து துனியா விஜய் தனது ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டு உள்ளார்.

அதில், அவரை நான் முதலில் பார்த்தபோது நல்ல ஹீரோவாக வருவார் என நினைத்தேன். படம் வெளியாவதற்குள் எங்களை விட்டு சென்றுவிட்டார். என்ன பிரச்சனை இருந்தாலும் தற்கொலை தீர்வாகாது. தொடர் மரணங்கள் இந்த ஆண்டு முடிவடையாது என்று நினைக்கிறேன். ஊரடங்கு காலத்தில் மக்கள் நம்பிக்கை இழந்து விடுகின்றனர் என பதிவு செய்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor susheel gowda suicide


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal