'சீதா ராமம்' திரைப்பட இயக்குனருடன் இணையும் நடிகர் சூர்யா.? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தில் அவர் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்திருந்தார்.

இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் வசூலில் சாதனை படைத்தது. விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்து வந்த ''வணங்கான்'' படத்தில் இருந்து விலகினார். 

இதனிடையே இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்ற பெயரிடப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா 13 கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா தெலுங்கு இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, துல்கர்சல்மான் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற 'சீதா ராமம்' படத்தை இயக்கிய இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும்,  இந்த படத்தை தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Surya act in setharamam movie director


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->