பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் மருத்துவமனையில் அனுமதி.!!
actor senthil corona positive
தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில். கவுண்டமணி-செந்தில் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் இவர்கள் கூட்டணிகாகவே பல நாட்கள் ஓடி உள்ளது. இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத நகைச்சுவை கூட்டணியாக திகழ்ந்து வருகின்றனர்.
செந்தில் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். இதனிடையே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு பாஜகவில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், நடிகர் செந்திலுக்கும், அவரது மனைவி கலைச்செல்விக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் இருவரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவருவதாகவும்m இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
English Summary
actor senthil corona positive