பூஜா ஹெக்டே அறுவை சிகிச்சை செய்வதற்கு காரணம் என்ன?.. - Seithipunal
Seithipunal


திரையுலகில் பிரபல நடிகையான பூஜா ஹெக்டே  அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் "முகமூடி" படத்தின் மூலம் திரையுலகில் தடம் பதித்த இவர் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து பிரபலமாகி உள்ளார். தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான " அல வைகுந்தபுரம்லு"  "ராதோஷியம் "  உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், திரையுலகில் பிரபல நடிகையான பூஜா ஹெக்டே  அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு தமிழில் நடிகர் விஜயுடன் "பீஸ்ட்" படத்தில் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் திரையில் தோல்விப்படமாக அமைந்துவிடுவதால், இவர் ராசி இல்லாத நடிகை என்று சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

இதன் காரணமாக பூஜா ஹெக்டே தன்னை மேலும் ஒப்பனை செய்து கொள்வதற்காக தன் மூக்கை அறுவை சிகிச்சையின் மூலம் சரி செய்துகொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பூஜா ஹெக்டே ஒல்லியாக இருந்தாலும், அவர் மூக்கு சற்று நீளமானது என்பதால் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

திரையுலகில் மறைந்த தமிழ் நடிகையான ஸ்ரீ தேவி பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்ததும், தனது மூக்கினை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துள்ளார் என்பது குறிப்பிட்ட தக்க ஒன்றாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor pooja hegde opperation


கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வைAdvertisement

கருத்துக் கணிப்பு

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10% இட ஒதுக்கீட்டை காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக வரவேற்று இருப்பது பற்றி உங்களின் பார்வை
Seithipunal