என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல்  கொலை முயற்சி.. பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் நடிகர் பிரபு நடித்த கலியுகம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பொன்னம்பலம். அதைத் தொடர்ந்து இவர் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சிம்ம ராசி, பகவதி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதில், இவர் நடித்த நாட்டாமை அமர்க்களம், முத்து போன்ற திரைப்படங்கள் பொன்னம்பலத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ரஜினிகாந்த், சரத்குமார், அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். 

இவர் தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தனது அண்ணனே தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

நடிகர் பொன்னம்பலம் தந்தைக்கு 4 மனைவிகள் அதில் மூன்றாவது மனைவியின் மகன் அவரது அண்ணனை தனது மேனேஜராக வைத்திருந்தார்‌. அப்போது அவர் பொன்னம்பலத்தின் வளர்ச்சி பிடிக்காமல் ஸ்லோ பாய்சன் கொடுத்து கொலை செய்ய செய்ய முயற்சித்ததாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, தன்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் அவருடைய அண்ணன் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அதன் பிறகு அவரை மன்னித்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

actor ponnambalam said My brother attempt to kill


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->