ரசிகர்களுக்கு ஷாக் ..!! பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமலஹாசன் திடீர் அறிவிப்பு..!! 
                                    
                                    
                                   Actor Kamalahasan Announced That He Quit From Big Boss Program 
 
                                 
                               
                                
                                      
                                            உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி தான் 'பிக் பாஸ்'. தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார். இதுவரை தமிழில் இந்த நிகழ்ச்சியின் 7 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது.
முன்னதாக தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன் வரைக்கும் தான் கமல் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்றும், அதன் பின்னர் ஒப்பந்தம் தொடரப்படவில்லை என்றும் செய்தி வெளியாகியது. ஆனால் அதை மறுத்த கமல் மற்றும் சேனல் தரப்பு 6 மற்றும் 7 ஆவது சீசனுக்கு கமலஹாசனையே தொகுப்பாளராகக் களமிறக்கியது. 
இதனிடையே ஓடிடி யில் வெளியான ஒரு சீசனை மட்டும் கமல் 'விக்ரம்' படப்பிடிப்பில் இருந்த சமயத்தில் நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார். இந்நிலையில் தற்போது பிக் பாஸ் எட்டாவது சீசனுக்கான வேலைகள் நடந்து வரும் நிலையில், தான் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர், "நான் முன்பே பல்வேறு சினிமா பணிகளில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளேன். இதன் காரணமாக என்னால் இனி பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முடியாது என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் தான் நான் உங்கள் அனைவரது வீடுகளுக்குள்ளும் வந்தேன். 
என் வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடங்களை நிகழ்ச்சித் தொகுப்பாளராக உங்களுடன் பகிர்ந்து கொண்டேன். இதற்காக விஜய் டிவிக்கும், மற்றும் அனைவர்க்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் சீசன்கள் அனைத்தும் வெற்றியடைய எனது வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இனி யார் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. 
                                     
                                 
                   
                       English Summary
                       Actor Kamalahasan Announced That He Quit From Big Boss Program