நடிகர் கமல்ஹாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


தமிழில் சினிமாவின் பிரபல நடிகரான கமலஹாசன் தற்போது இயக்குனர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஐதராபாத் சென்ற நடிகர் கமல்ஹாசன், அங்கு இயக்குனர் விஸ்வநாத்தை சந்தித்தார். மேலும், அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நேற்று மதியம் சென்னை திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு லேசான காய்ச்சல் காரணமாக நடிகர் கமல்ஹாசன் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

இதுகுறித்து கமல்ஹாசன் தரப்பில் கேட்டபோது, வழக்கமான பரிசோதனைக்காகவே கமல்ஹாசன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். டாக்டர்கள் ஓய்வு எடுக்க சொன்னதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் இன்று வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor kamalahasan admitted hospital


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->