மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கிய நடிகை ஜோதிகா.!
actor jothika act pollywood movie
தமிழ் சினிமாவில், திருமணத்திற்குப் பிறகு கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வரக்கூடியவர் நடிகை ஜோதிகா. இதைத் தொடர்ந்து இவர் மலையாளத்திலும் ‘காதல் தி கோர்’ மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அந்தப் படமும் அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.
தற்போது, ஜோதிகா குழந்தைகளின் படிப்பு மற்றும் பெற்றோர் நலனுக்காக மும்பையில் தங்கியுள்ளார். அதனால், அவர் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், ஜோதிகா தற்போது அஜய்தேவ்கன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சைத்தான்’ படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே இந்தியில் அறிமுகமான இவர், இப்போது 26 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் பாலிவுட்டிற்கு சென்றிருக்கிறார். இவர் நடிக்கும் இதே படத்தில் தான் நடிகர் மாதவனும் நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் ஜோதிகா- மாதவன் நடிப்பில் வெளியான ‘டும் டும் டும்’, ‘பிரியமான தோழி’ உள்ளிட்ட படங்கள் ஹிட் ஆன நிலையில், ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட இந்த ஜோடி மீண்டும் பாலிவுட்டில் ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்பதை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.
English Summary
actor jothika act pollywood movie