ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படத்தின் “சிவ சிவா” என்ற பெயர் மாற்றம்.. புதிய பெயர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


ஜெய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு 'சிவ சிவா' என்ற தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. தற்போது 'சிவ சிவா' என்ற தலைப்பை மாற்றி படத்தின் இயக்குனர் சுசீந்திரன் புதிய பெயரை அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பத்திரிக்கை மற்றும்‌ ஊடக நண்பர்கள்‌ அனைவருக்கும்‌ வணக்கம்‌.

Lendi Studios தயாரிப்பில்‌, ஜெய்‌ நடிப்பில்‌ “சிவ சிவா” என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளேன்‌. விரைவில்‌ இத்திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்‌. Final Mixing-ல்‌ இத்திரைப்படத்தை பார்த்த என்‌ நண்பர்கள்‌ வெகுவாக என்னையும்‌, என்‌ படக்குழுவினரையும்‌ பாராட்டினார்கள்‌. அவர்கள்‌ என்னிடம்‌ ஒரு வேண்டுகோளை முன்‌ வைத்தார்கள்‌. 

இத்திரைப்படம்‌ கிராமம்‌ சார்ந்த திரைப்படம்‌ என்பதால்‌, “சிவ சிவா” திரைப்படத்திற்கு மாற்றாக மண்சார்ந்த கிராமத்து தலைப்பு இருந்தால்‌ இன்னும்‌ இத்திரைப்படத்திற்கு கூடுதல்‌ பலம்‌ சேர்க்கும்‌ என்று கூறினார்கள்‌, அவர்கள்‌ கூறிய ஆலோசனையில்‌ எனக்கும்‌ உடன்பாடு ஏற்பட்டதால்‌ தயாரிப்பாளர்‌ அவர்களின்‌ சம்மதத்துடன்‌ என்‌ உதவியாளர்களுடன்‌ ஆலோசித்து “சிவ சிவா” என்ற தலைப்பிற்கு மாற்றாக “வீரபாண்டியபுரம்‌” என்ற தலைப்பு தேர்வு செய்துள்ளோம்‌ என்பதை மகிழ்ச்சியுடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Jai movie name change


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->