லண்டன் : சர்வதேச திரைப்பட விழாவிற்கு தனுஷின் "கேப்டன் மில்லர்" பரிந்துரை..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் இயக்குனர் என்று பன்முகத் திறமை கொண்டவராக இருப்பவர் தனுஷ். இவர் 2002ம் ஆண்டு துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

அதே போல இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர் அருண் மாதேஸ்வரன். இவர் 2021ம் ஆண்டு ராக்கி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்நிலையில் இவர் தனுஷை வைத்து 'கேப்டன் மில்லர்' என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். 

இப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பிரியங்கா மோகன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு  ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார்.

இந்நிலையில் 100 கோடி வசூலைக் குவித்த  இத்திரைப்படம் லண்டனில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இச் செய்தியை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யா ஜோதி பிலிம்ஸ் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

இந்த கேப்டன் மில்லர் திரைப்படம் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவில் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து கேப்டன் மில்லர் என்று அழைக்கப்பட்ட ஒரு புரட்சியாளரைப் பற்றிய வரலாற்று காவிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Dhanushs Captain Miller Recommended For International Film Awards


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->