நடிகர் அபிநய் நினைவேந்தல்: யாரும் அனாதையா சாகக்கூடாது..அவர் ஆசை நிறைவேறியது” – கேபிஒய் பாலா உருக்கமான பேச்சு
Actor Abhinay Ninnevendal No one should die an orphan his wish has come true KBY Bala heartfelt speech
‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான நடிகர் அபிநய், பின்னர் 'ஜங்ஷன்' படத்தில் ஹீரோவாகவும் நடித்தவர். அதன் பிறகு சில துணை வேடங்களில் நடித்தாலும், உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக அவர் திரையுலகில் இருந்து விலக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அவரது கல்லீரல் நோய் மோசமடைந்து, உடல் எடை வேகமாக குறைந்து, அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி சிகிச்சை பெற்றிருந்தார். ஆனால் அந்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தது திரையுலகை அதிர்ச்சியடைய வைத்தது.
சென்னையில் நடந்த அபிநய் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கேபிஒய் பாலா உணர்ச்சி வசப்பட்டு பேசியது அனைவரையும் கண்கலங்க வைத்தது.
அவரது உரையில்,“அபிநயை சில மாதங்களாக மட்டுமே தான் தெரியும். ஆனால் அவர் எனக்கு வாழ்க்கையில் பெரும் துயரங்களையும் பயங்களையும் பகிர்ந்து கொண்டார்” என்றார்.
முதலில் அவரைத் தொடர்பு கொண்டபோது அவர் யார் என்பதே தெரியவில்லை. பின்னர் அவர் அனுப்பிய புகைப்படத்தைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன் என்றார் பாலா.
“அவருக்கு கல்லீரல் பிரச்சனை; சிகிச்சைக்குத் தேவையான பணம் இல்லை” என அபிநய் சொல்லியதை நினைவுகூர்ந்தார்.
அவர் அடிக்கடி “எனக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ”, “மீண்டும் சினிமா வரலாமா?”, “விருது வாங்குவேனா?” என்று கவலையுடன் பேசுவதை பாலா கூறினார்.
அபிநயை தனியாக வாடகை வீட்டில் தங்க வைத்து பார்த்துக் கொண்டதாகவும்,அறுவை சிகிச்சைக்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்ததாகவும்,இறப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன் அபிநய் வீட்டு வாடகை கேட்டதால் உடனே அனுப்பிவைத்ததாகவும்,வழக்கமான “OK”க்கு பதில் “Thank you brother, God bless you” என அவர் அனுப்பிய செய்தி இப்போது இதயத்தை நொறுக்கும் என பாலா கூறினார்.
அபிநய் அடிக்கடி,“நான் அனாதையாக இறக்கக் கூடாது. என் அஞ்சலிக்கு மக்கள் வர வேண்டும்”என்று பாலாவிடம் சொல்லியுள்ளார்.
அந்த ஆசை நிறைவேறியதாக பாலா கரம் குலுங்கி கூறினார்.“அவரின் இறுதி ஊர்வலத்தில் நடிகர்கள், ஊடக நண்பர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். அதை பார்த்து எனக்கு கூட மனநிறைவு ஏற்பட்டது” என்று உருக்கமாக தெரிவித்தார்.
“I love you sir… நீங்க இல்லாதாலும் உங்க நினைவு எங்களோடு இருக்கும்” என்று பாலா அவ்வுரையை முடித்தார்.அபிநயைத் தொழில்துறையினர், ரசிகர்கள் பலர் அன்புடன் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
English Summary
Actor Abhinay Ninnevendal No one should die an orphan his wish has come true KBY Bala heartfelt speech