தூக்கில் பிணமாக தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகை.. அதிர்ச்சியில் திரையுலகம், ரசிகர்கள்.!! - Seithipunal
Seithipunal


திரையுலகை பொறுத்த வரையில் நடிகைகள் அவ்வப்போது தற்கொலை செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஹிந்தி சின்ன திரையுலகை சார்ந்த நடிகை தற்கொலை செய்துள்ள சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது. 

"தில் தோ ஹப்பி ஜி" என்ற இந்தி தொடரில் நடித்து வந்த நடிகை சேஜல் சர்மா (வயது 25). இவர் இடத்தொடரில் "சிம்மி கோஷ்லா" என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், மும்பையை அடுத்துள்ள சுவர் கார்டன் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில்,, நேற்று முன்தினத்தின் போது தனது அறையில் இவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு இவரது தோழி பார்த்து அதிர்ச்சியடைந்து அலறவே, இதனை கேட்டு அதிர்ச்சியான அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் நடிகையின் உடலை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், இவரது அறையில் இருந்த கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். இந்த கடிதத்தில் தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றும், தனிப்பட்ட காரணத்தால் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். 

மேலும், இவர் நடித்து வந்த தொடர் கடந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், இதற்கு பின்னர் நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்ததாகவும், இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்ப்பூர் என்ற நிலையில், இவர் பிரபல நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் விளம்பரத்திலும் நடித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a famous tv actress sejal sharma attempt suicide died


கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
கருத்துக் கணிப்பு

குடியுரிமை சட்டதிருத்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளது...
Seithipunal