"தங்கம் விலை எப்போது குறையும்? கவலை வேண்டாம்! தங்கம் விலை குறித்து ஆனந்த் சீனிவாசன் விளக்கம்! - Seithipunal
Seithipunal


கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை சீரான நிலையில் இருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் திடீரென விலை உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் மத்தியில் தங்கம் மீண்டும் வேகமாக உயரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனால், பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், தங்கம் விலை டிசம்பர் மாதம் வரை பெரும் ஏற்ற இறக்கமின்றி இருக்கும் என தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதன் மூலம், ஒரு கிராம் தங்கம் ரூ.11,700க்கும், 18 கேரட் தங்கம் ரூ.9,750க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த திடீர் உயர்வால் பொதுமக்கள் விலை மேலும் உயரும் என கவலைப்பட்டனர்.

இந்நிலையில் தனது யூடியூப் சேனல் மூலம் தங்கம் விலை நிலவரம் குறித்து பேசிய ஆனந்த் சீனிவாசன் கூறியதாவது:“நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலை 2 சதவீதம் வரை உயர்ந்தது. இதற்குக் காரணம் அமெரிக்க அரசின் ‘ஷட் டவுன்’ நிலைமையிலிருந்து மீளும் அறிகுறிகள்தான். அங்கு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த எட்டு எம்.பி.க்கள் கட்சி மாறி ஆளும் குடியரசுக் கட்சிக்காக வாக்களித்ததால், பங்குச் சந்தையும் தங்க விலையும் உலகளவில் உயர்ந்தன. அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் காணப்பட்டது,” என்றார்.

மேலும் அவர் கூறியதாவது:“தங்கம் விலை இனி குப்புனு உயராது. இது அமெரிக்க பெடரல் வங்கியின் முடிவுகளைப் பொறுத்தே இருக்கும். டிசம்பரில் பெடரல் வங்கியின் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் வட்டி விகிதம் குறைக்கும் பேச்சு நேர்மறையாக இல்லாவிட்டால் தங்கம் விலை சரியும். எனவே, அடுத்த மாதம் வரை பெரிய மாற்றம் இருக்காது.”

அதோடு, அவர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்:“உங்களுக்கு அவசியம் என்றால் மட்டும் தங்கத்தை வாங்குங்கள். இல்லையென்றால் சிறு அளவில் வாங்குவது பாதுகாப்பானது. தங்கம் விலை குறித்து பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை,” என்று கூறினார்.

தங்கத்தின் விலை தற்போது ஒரு “ஃப்ளோர் நிலை” அடைந்துள்ளதாகவும், அதாவது விலை மிகக் குறையாது, அதேசமயம் திடீரென அதிகரிக்கும் வாய்ப்பும் இல்லை என்றும் அவர் விளக்கினார்.

இது ஒரு பொருளாதார மதிப்பீடு மட்டுமே என்றும், இதை முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மொத்தத்தில், டிசம்பர் மாதம் வரை தங்கம் விலையில் பெரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இல்லை என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, தங்கம் வாங்க விரும்புபவர்கள் சந்தை நிலையை கவனித்து மெதுவாக நடவடிக்கை எடுக்கலாம் என பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

When will the price of gold come down Donot worry Anand Srinivasan explains the price of gold


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->