அதிரடியாக குறைந்த உளுந்து விலை - மகிழ்ச்சியில் பொதுமக்கள்.!
ulunthu price decrease
தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உளுந்து சாகுபடி அதிகரித்துள்ளது. 2024 ஜூலை 5 ஆம் தேதி நிலவரப்படி, உளுந்து சாகுபடிக்கான நிலப்பரப்பு 5.37 லட்சம் ஹெக்டேராக இருந்தது.
இதுவே சென்ற ஆண்டு இதே காலத்தில் 3.67 லட்சம் ஹெக்டேராக இருந்தது. மூன்று மாத கால பயிரான உளுந்து உற்பத்தி கரீஃப் பருவத்தில் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் கொள்முதல் முகமைகளில் பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் மட்டும் உளுந்து பயிரிடும் 8, 487 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதேபோல், தமிழகத்தில் 1611 விவசாயிகள், மகாராஷ்டிராவில் 2037 விவசாயிகள், உத்தரப்பிரதேசத்தில் 1663 விவசாயிகள் முன்கூட்டியே பதிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக இந்தூர் மற்றும் டெல்லி உள்ளிட்ட சந்தைகளில் 2024 ஜூலை 6 ஆம் தேதி நிலவரப்படி, உளுந்தின் மொத்தவிலை முந்தைய வாரத்தைவிட, முறையே 3.1 சதவீதமும், 1.08 சதவீதமும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.